• Jul 23 2025

24-ஆவது திருமண நாளை கொண்டாடிய விஜய் - சங்கீதா..சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி? தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நடிகர் விஜய்க்கும் ரசிகை சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. சினிமா ஷூட்டிங்கை பார்க்க வந்த சங்கீதாவுக்கு நடிகர் விஜய்யை பார்த்ததும் பிடித்துப் போக அவரிடம் தனது விருப்பத்தை சொல்ல, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.


24 ஆண்டுகள் வெற்றிகரமாக திருமண வாழ்க்கையை நடத்தி வரும் இந்த தம்பதியினருக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு குழந்தைகள் உள்ளனர்.

 நடிகர் விஜய்யுடன் சமீப காலமாக தென்படாத சங்கீதா திடீரென சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை தியேட்டரில் வந்து பார்த்த வீடியோக்கள் டிரெண்டாகின.


கண்டிப்பாக நடிகர் விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சங்கீதா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவுக்கு தளபதி ரசிகர்கள் திருமண நாள் வாழ்த்துக்களை சொல்ல #Sangeetha ஹாஷ்டெக்கில் விஜய்யுடன் பல முறை சினிமா விழக்களில் அவர் கலந்து கொண்ட வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.


 நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் தற்போது வெளிநாட்டில் தங்கள் குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

எனவே ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக ஏதாவது திருமண நாள் சர்ப்ரைஸ் ட்ரீட் இருக்குமா என சமூகவலைத்தளங்களில் தேடி வருகின்றனர்.


Advertisement

Advertisement