• Jul 26 2025

234 தொகுதிகளிலும் இப்படியொரு விஷயத்தை செய்யப் போகும் விஜய்...யாரும் இதை எதிர்பார்க்கலையே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில்  மட்டுமின்றி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக ஆண்டு தோறும் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வாங்கி தருவது, ஃபீஸ் கட்ட முடியாத மாணவர்களுக்கு ஃபீஸ் கட்டுவது போன்ற ஏகப்பட்ட உதவிகளை செய்யத் தூண்டி வருகின்றார்.

அத்தோடு  இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண்களை எடுத்த திண்டுக்கல்லை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் நந்தினியை விஜய் மக்கள் இயக்கத்தினர் சந்தித்து வாழ்த்தினர்.

மேலும், நடிகர் விஜய்யும் அந்த மாணவியை வாழ்த்தியதாக புஸ்ஸி ஆனந்த் ட்வீட் போட்டு இருந்தார். இவ்வாறுஇருக்கையில் , நந்தினியை மட்டுமில்லை பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை அள்ளிய மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதுடன் அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களை சந்தித்து பரிசு வழங்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல்முறை வாக்காளர்களை கவர்வதற்காக இப்படியொரு பலே ஐடியாவை நடிகர் விஜய் போட்டு இருக்கிறாரா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

அத்தோடு முழு மதிப்பெண்களை பெற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி நந்தினி சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். உதயநிதி ஸ்டாலினும் அந்த மாணவிக்கு வாழ்த்துக்களுடன் பரிசுகளை கொடுத்தார்.

இவ்வாறுஇருக்கையில், அடுத்ததாக நடிகர் விஜய்யும் மாணவர்களை மொத்தமாக சந்தித்து பரிசுகளை வழங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க சொன்னதை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக சாதனை படைத்த மாணவர்களை சந்திக்கப் போவதும் அவரது அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement