• Jul 25 2025

எனக்கு Acting-அ விட இது தான் ரொம்ப பிடிக்கும் யாரும் இல்லை என்றால் கூட தனிய பண்ணிட்டே இருப்பேன்- ஓபனாக பேசிய சாய் பல்லவி

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தும் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக எவ்வித நடன பயிற்சி மையங்களுக்கும் செல்லாமல், ஐஸ்வர்யாராய், மாதுரி தீட்சித், போன்ற நடிகைகளின் நடனத்தை பார்த்து பார்த்து டான்ஸில் மின்னியவர்.

நடனத்தில் மட்டுமின்றி படிப்பிலும் செம சுட்டி தான் சாய் பல்லவி. ஜார்ஜியாவில் இருதய நோய் நிபுணருக்கான மருத்துவ பட்டம் பெற்றவர்.பின்னர் எதேர்ச்சியாக பிரேமம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட சாய்பல்லவி, மலையாள திரை உலகின் மூலம் நடிப்பில் கால் பதித்தார்.


இவருடைய முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், சாய்பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம் ,போன்ற மொழிகளில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அmதனை சரியாக பயன்படுத்தி நடித்து வருகின்றார்.

தற்பொழுது சிவகார்த்திகேயனின் 21 படத்தில் நடித்து வருகின்றார். இது ஒருபுறம் இருக்க இவர் சேற்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். இவருக்கு திரையுலகைச் செர்ந்த பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.


இப்படியான நிலையில் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார்.அதில் டாக்டர் ஆக்டிங் டான்ஸிங் இந்த மூன்றிலையும் எது உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்ட போது டான்ஸ் தான் ரொம்ப பிடிக்கும் ஷுட்டிங் முடிஞ்சப் பிறகு கூட நான் ஆடிக் கொண்டே இருப்பேன்.யாரும் பார்கலை என்றால் கூட ஆடிட்டு இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.







Advertisement

Advertisement