• Jul 26 2025

அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம் – கட்சியின் சின்னம் இதுவா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத் தொகை வழங்கினார்.

இந்நிகழ்வில் மேடையில் பேசிய  நடிகர் விஜய் நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய மற்றும் நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்வு செய்யப் போகிறீர்கள். அம்பேத்கர்இ பெரியார்இ காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து அதிகம் படிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஓட்டுக்கு காசு கொடுக்கும் அரசியலில் போட்டியிடும் நபர் குறித்து யோசித்துப் பாருங்கள். உங்கள் அப்பா,அம்மாவிடம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் எனச் சொல்லுங்கள். இது நடந்தால் உங்கள் கல்வி முறை முழுமை அடையும் என நான் நினைக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய விஜய் நமது விரலை வைத்து நமது கண்ணை குத்திக்கொள்ளும் பணியை நாம் செய்து கொண்டுள்ளோம். நான் எதைச் சொல்ல வருகிறேன் என்றால் காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பது. என இன்றைய அரசியல் போக்கையும் சுட்டிக் காட்டினார்.

இவ்வாறானதொரு நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இதற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement