• Jul 23 2025

தவறவிட்ட மாணவியை நேரில் சந்தித்து கௌரவித்த விஜய்... குவியும் பாராட்டுக்கள்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். மேலும் இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


இந்த நிலையில் மாணவி ஒருவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அணுகி நான் 597 மதிப்பெண் எடுத்திருக்கிறேன். என்னை ஏன் ஊக்கத்தொகைக்கு வழங்க தேர்வு செய்ய வில்லை? என்னை ஏன் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்று கூறி கண்ணீர் வடித்தார். 

இதனையடுத்து நேற்றைய தினம் குறித்த மாணவியை நடிகர் விஜய் நேரில் சந்தித்து கௌரவித்துள்ளார். இதற்குப் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement