• Jul 23 2025

அரசியலுக்கு வர முதல் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்லவுள்ள விஜய் - அப்போ இது தான் கடைசிப் படமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அரசியலில் நுழைய உள்ளது தான் தற்போது தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. அவர் எப்போது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அவர் அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், அதற்கான பணிகளை சைலண்டாக செய்துகொண்டு தான் இருக்கிறார். 

தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள இவர் நேற்றைய தினம் சென்னை பனையூரில் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற மீட்டிங்கில் தான் அரசியலுக்கு வந்துவிட்டால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என கூறினாராம் விஜய். முதன்முறையாக நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து ஓப்பனாக பேசி உள்ளதால் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் செம்ம குஷியாகி உள்ளனர். இன்றும் விஜய் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.


இது ஒருபுறம் இருக்க, நடிகர் விஜய்யின் மற்றொரு திட்டம் அனைவருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக உள்ளது. அது என்னவென்றால், நடிகர் விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டு உள்ளாராம். அதுவும் லியோ பட ரிலீசுக்கு முன்னரே அவர் இந்த பாத யாத்திரையை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மக்களை நேரடியாக சந்தித்து தனது அரசியல் எண்ட்ரியை அறிவிக்கவே விஜய் இந்த பிளானை போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,


லியோ பட இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ள விஜய், அந்த சமயத்தில் இந்த பாத யாத்திரையை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. விஜய் இப்படி அரசியல் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்வதை பார்த்தால் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள தளபதி 68 தான் அவரின் கடைசி படமாக இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement