• Jul 25 2025

அரசியல் கட்சியைத் தொடங்க நாள் குறித்த விஜய்... அதுவும் இந்தத் தேதியிலா... வெளியானது குட் நியூஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் ஒருபுறம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், மறுபுறம் தனது அரசியல் ஆசையையும் வளர்த்து வருகிறார். அந்தவகையில் சமீபகாலமாக அவரின் மக்கள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயல்பாடுகள் கூடிய விரைவில் விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. 

அதிலும் குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  தொகுதி வாரியாக முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி இருந்த விஷயமானது அவரின் அரசியல் பயணத்துக்கான தொடக்கப்புள்ளியாக பலராலும் பார்க்கப்படுகிறது.


அதுமட்டுமல்லாது சமீபத்தில் பனையூரில் விஜய் மக்கள் இயக்க பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருக்கின்றார். மேலும் 'விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விரைவில் இரவு நேர பாடசாலை தொடக்கப்படும் எனவும், இந்த பாடசாலை மூலம், பள்ளி சென்று படிக்க முடியாத ஏழை எளிய மாணவர்கள் இலவசமாக இரவு நேரத்தில் கல்வி பயின்று பயனடையும் விதத்தில் இந்த பாடசாலைகள் தொடங்கப்பட உள்ளதாகவும் ஒரு தகவல் ஏற்கெனவே வெளியாகி இருக்கின்றது. 


இவ்வாறாக அரசியலுக்கு அடித்தளமிட்டு வரும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது தற்போது விஜய் அரசியல் கட்சியை விரைவில் தொடங்க நாள் குறித்து விட்டதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி, அதாவது பெரியாரின் பிறந்தநாள் அன்று விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளாராம். 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement