• Jul 25 2025

முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கதாநாயகனாகும் விஜய் சேதுபதி- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் தனக்கென ஒரு ரிகர் பட்டாளத்தை சேர்த்ததோடு தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கிய நடிகர் தான் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் இன்றைய தினம் டிஎஸ்பி என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.இப்படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ளார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வாழ்க்கை கதையை படமாக  இயக்க முடிவெடுத்துள்ளார்களாம்.


 இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனது வாழ்க்கையை படமாக்க கட்சியினருக்கு விருப்பம் உள்ளது. ஆனால் அதில் நான் நடிக்கவில்லை" என்றார்.இந்நிலையில் சித்தராமையா வாழ்க்கை படத்தில் அவரது வேடத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சித்தராமையா வாழ்க்கை படத்தை வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திரைக்கு கொண்டு வந்தால் வெற்றிபெற வாய்ப்பாக அமையும் என்று கட்சியினர் முனைப்பு காட்டி வருகிறார்கள். 


சித்தராமையா அரசியலில் சில கட்சிகளில் இணைந்து படிப்படியாக உயர்ந்து இறுதியில் காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரியாக ஆட்சி நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement