• Jul 25 2025

இப்படித்தான் கட்டிப் பிடிக்கணும்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 லால் சலாம் படத்தை இயக்கி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மகன் லிங்காவை கட்டி அணைத்திருக்கும் உணர்ச்சி பூர்வமான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.தனுஷின் 3, கெளதம் கார்த்திக்கின் வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.சமீபத்தில் நடைபெற்ற கெளதம் கார்த்திக் திருமணத்தில் கூட கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

மேலும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் அறிவித்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.அத்தோடு  18 வருட திருமண வாழ்க்கையை இருவரும் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

சினிமா பயணத்திற்காக தன்னை தயார் செய்து கொள்ள ரொம்பவே கஷ்டப்பட்டு ஏகப்பட்ட வொர்க்கவுட்டுகளையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்து வருகிறார்.அத்தோடு  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதன் வீடியோக்களையும், போட்டோக்களையும் அடிக்கடி போட்டு டிரெண்ட் செய்து வந்த அவர் தனது அடுத்த பட அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டார்.


தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக கெளதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். ஆனால், அதன் பின்னர்  பல ஆண்டுகள் ஆகியும் அவர் எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை. தனுஷை பிரிந்த நிலையில், தற்போது மீண்டும் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் ஆல்பம் பாடல் ஒன்றையும் இயக்கி இருந்தார் ஜஸ்வர்யா.


மேலும் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் சிறப்பு தோற்றத்தில் அப்பா ரஜினிகாந்த் நடிக்க உள்ள லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். லைகா தயாரிப்பில் உருவாகி வரும் அந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். எனினும் சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அப்பா ரஜினியுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகனை கட்டியணைத்து பாசத்தை பொழியும் லேட்டஸ்ட் புகைப்படத்தை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார். 'Hugs like this Linga' என ஹார்ட்டீன்களை பறக்கவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.




Advertisement

Advertisement