• Jul 24 2025

கெட்டவார்த்தையில் பேசி கண்டனத்துக்குள்ளான விஜய்சேதுபதி- அடடே இது அவர் பண்ணலயா?- மோசமாக கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் வெற்றிக்கு பின்னர்,  ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில் உருவாக்கியுள்ள புதிய வெப் சீரிஸ் 'ஃபர்சி'. இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  மேலும் ராஷி கண்ணா, கேகே மேனன், நடிகை ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


எட்டு எபிசோடுகளுடன் உருவாக்கிய இந்த தொடரில், நகைச்சுவை, ஆக்சன், த்ரில்லிங், என அனைத்தும் அம்சங்களும் உள்ளன. செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு பாடம் கற்பிக்க நினைக்கும், புத்திசாலித்தனமான தெருக்கலங்களை சுற்றி இந்த கதை நகர்கிறது. அவருக்கும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் இடையேயான ஒரு விறுவிறுப்பான போராட்டம் தான் ஃபர்சி.

இப்படம் இந்த மாதம் பிப்ரவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இதில் நடித்த விஜய் சேதுபதி பல கண்டனங்களுக்கு உள்ளாகி வருகின்றாராம்.


காரணம் இந்த தொடரில் நிறைய கெட்ட வார்தை விஜய் சேதுபதி பேசியிருக்கின்றாராம் என்ற கூறப்பட்டது. ஆனால் அவர் பேசவில்லையாம். விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமான டி எஸ் கே தான் விஜய் சேதுபதி போல டப்பிங் பேசியுள்ளாராம்.இருந்தாலும் விஜய்சேதுபதி தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு இவ்வளவு கெட்டவார்த்தை பேசிற மாதிரி வைக்கணுமா என்று கேட்டிருக்கலாம் இல்லை என்றால் இதனை தவிர்த்திருக்கலாம் தானே என்று ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement