• Jul 26 2025

அரசியலில் கால் பதிக்கவுள்ள விஜய்..! சூட்சுமமாக அவரே சொன்ன புதிய தகவல்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் தளபதி 67 என்கின்ற 'லியோ'.குறித்த படத்தில் 'Naa Ready' என சிங்கிள் பாடல் குறித்து பேசப்பட்டு வருகின்றது.

 இந்நிலையில்இ அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவஇ மாணவியருக்கு சான்றிதழ்இ ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றதுஇ

இந்நிகழ்வில் நடிகர் விஜய் பங்கேற்றார்.

அதேவேளை நடிகர் விஜய் அரசியலில் கால் பதிக்கும் முதற் படியாக இந் நிகழ்வு இருக்குமா எனவும்  பல்வேறு தரப்பினரும்  கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதற்கு அறிகுறியாக நடிகர் விஜய் 3 விஷயங்களை செய்துள்ளார். ஒன்று அம்பேத்கர் பிறந்தநாள் அன்று 234 தொகுதிகளிலும் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உத்தரவிட்டார். அது போல் உலக பட்டினி தினத்தன்று 234 தொகுதிகளிலும் மதிய உணவு வழங்குமாறு தெரிவித்திருந்தார். அது போல் 10இ பிளஸ் 2 தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவஇ மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு நிதியுதவியும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி பேசி உள்ளார்.

அவரது உரையில் வாக்காளர்கள் மற்றும் ஓட்டுக் கேட்க வருபவர்கள் தொடர்பிலும் கருத்துக்களை கூறினார். அதாவது காசு கொடுத்து ஓட்டுக் கேட்பவர்களை புறக்கணியுங்கள் எனவும் சரியானவர்களை தெரிவு செய்யுங்கள் எனவும் மறைமுகமாக தனது அரசியல் பிரவேசத்தை சுட்டிக்காட்டியுள்ளாரா என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது.

Advertisement

Advertisement