• Sep 14 2025

திருமணமாகி ஒரே வருடத்தில்... விஜய் டிவி சீரியல் நடிகையின் கணவர் உயிரிழப்பு... வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்'என்ற சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இதனைத் தொடர்ந்து இவர் வாணி ராணி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். 


அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அத்தோடு 2016 ஆம் ஆண்டு வெளியான கொடி என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இவர் வக்கீலும், பொறியாளரும், உடற்பயிற்சி ட்ரையினராக இருந்த அரவிந்த் சேகர் என்பவரை 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். 


இந்த நிலையில் தற்போது ஸ்ருதியின் கணவர் உயிரிழந்துள்ளார். அதாவது அரவிந்துக்கு தற்போது கார்டியாக் அரஸ்ட் என சொல்லப்படும் இருதய முடக்கம் ஏற்பட்டு அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. திருமணமாகி ஒரு வருடங்களே ஆகியிருக்கும் நிலையில் அரவிந்த் சேகர் இவ்வாறு மாரடைப்பால் உயிரிழந்துள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

Advertisement