• Jul 26 2025

வேறொரு சேனலின் சீரியலை காப்பியடித்த விஜய் டிவி சீரியல் குழுமம்.. வச்சு செய்யும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிற்கு என்று ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு உண்டு. அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட தொடர் 'ஆஹா கல்யாணம்'. இந்த சீரியலில் கோடீஸ்வரி மற்றும் அவரது 3 மகள்களான மகாலட்சுமி, ஐஸ்வர்யா, பிரபா ஆகியோர் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார்கள். தன் மகள்களுக்கு எப்படியாவது பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது இதில் கோடீஸ்வரியின் கனவாக இருக்கிறது. 

கோடீஸ்வரி கனவு நிறைவேறுமா? என்பதே சீரியலின் உடைய மீதிக் கதை. இந்த சீரியலானது ஒளிபரப்பான குறுகிய நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பு பெற்று வருகிறது. இதில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் கோடீஸ்வரியின் மூன்றாவது மகளாக நடிப்பவர் நடிகை பவ்யஸ்ரீ.


இந்நிலையில் ஆகா கல்யாணம் சீரியலில் பவ்யஸ்ரீ கெட்டப்பை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். அதாவது, ஆஹா கல்யாணம் தொடரில் பிரபாவாக நடிக்கும் பவ்யஸ்ரீ பார்ப்பதற்கு ஆணை போல உடல் அணிந்து, முடியையும் கட் பண்ணி டாம் பாய் போல் இருக்கிறார். 

இது ஜீ தமிழில் ஏற்கெனவே ஒளிபரப்பான சத்யா சீரியல் நடிகையின் கெட் அப் என்பது அனைவரும் அறிந்ததே. மீண்டும் அதே மாதிரி கெட்டப்பை விஜய் டிவி சீரியல் நடிகை பவ்யஸ்ரீ நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகிறது. 


இதை பார்த்த பலரும் அதே டைலர், அதே வாடகையா? சத்யா சீரியல் ஆயிஷா லுக்கை அப்படியே காப்பி அடித்து இருக்கிறது விஜய் டிவி என்றெல்லாம் கேலி செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement