• Jul 25 2025

குக்வித் கோமாளி நிகழ்ச்சியால் சிக்கிய விஜய் டிவி...இப்படியொரு மட்டமான வேலையா..? கொதித்தெழுந்த நெட்டிசன்கள்...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவிக்கு ஒருவர் வந்து விட்டாலே வெகு சீக்கிரத்திலேயே அவர் மக்கள் முன் பிரபலமாகிவிடுவார். மேலும்  அப்படி பிரபலமான சிவாங்கிக்கு ஏராளமான ரசிகர்கள்  உள்ளனர். அதன் காரணமாகவே அவர் இப்போது வெள்ளி திரையிலும் கால் பதித்துள்ளார். அதில் இருந்தே அவரைச் சுற்றி சில சர்ச்சைகள் பரவ ஆரம்பித்தது.

அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சிவாங்கி  சமூகவலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றார். கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்த இவர் தற்போது போட்டியாளராக களம் இறங்கியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. எனினும் அதைத்தொடர்ந்து அவர் சமையலிலும் அசத்தி கொண்டிருக்கிறார்.



நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்தில் இருந்து இப்போது வரை அவருடைய சமையலை குக் வித் கோமாளி நடுவர்கள் பாராட்டி வருகின்றனர். இதுதான் இப்போது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த வாரம் விஜே விஷால் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் உண்மையில் சிவாங்கி தான் வெளியேறி இருக்க வேண்டுமென்றும் விஜய் டிவி அவரை திட்டம் போட்டு காப்பாற்றி விட்டது என்றும் ரசிகர்கள்  தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக ஒரு வாரம் நன்றாக சமைப்பவர்கள் மறுவாரம் ஏதாவது ஒரு விஷயத்தில் சொதப்புவார்கள். ஆனால் சிவாங்கி மட்டும் எதிலும் சொதப்பாமல் இருப்பதே ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோன்று இத்தனை வாரங்களில் அவர் ஏன் ஒருமுறை கூட நான் வெஜ் உணவுகளை சமைக்கவில்லை எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



இதன் மூலம் விஜய் டிவி சிவாங்கிக்கு சாதகமாக நடந்து கொள்வது தெளிவாக தெரிகிறது. அதிலும் இந்த வார எலிமினேஷன் நிகழ்வின் போது சிவாங்கிக்கு அதிக நெகட்டிவ் விமர்சனங்கள் நடுவர்களால் கொடுக்கப்பட்டது. இருப்பினும் விஷால் எலிமினேட் செய்யப்பட்டு விட்டார். இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் விஜய் டிவியை கண்டபடி திட்டி வருகின்றனர்.


Advertisement

Advertisement