• Jul 24 2025

'அவர் அந்த விஷயத்தில் ரொம்ப வீக்'..! தனது காதலன் குறித்து ஓபனாக பேசிய நடிகை ஸ்ருதிகாசன்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர்  கமல்ஹாசனின் மகளும் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகிகளில் ஒருவருமான நடிகை ஸ்ருதிஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவின் மிக முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சேனல் ஒன்றுக்கு  சிறப்பு பேட்டி கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில், “வாழ்க்கையில் தந்தையைத் தாண்டி மற்றொரு நபர் நம் வாழ்க்கை முழுவதும் இருக்கப் போகிறவர் நம் வாழ்க்கை துணை தான். எனவே சாந்தனு அவர்கள் பற்றி சொல்லுங்களேன் அவர் எவ்வளவு உறுதுணையாக இருக்கிறார்?” எனக் கேட்டபோது,

 “அவர் மிக மிக உறுதுணையான ஒரு மனிதர்... இயல்பாகவே பெண்களை மதிப்பவர். அவருடைய தாயார் மற்றும் சகோதரிகளால் அவர் அப்படி இருப்பதால் நானும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். மேலும் அந்த ஒரு புரிதல் அவருக்கு ஏற்கனவே இருப்பதால்... மேலும் அவர் ஒரு கலைத்துவமான மனிதர்... அவருடைய துறையில் மிகப்பெரிய பாதை வகுத்தவர். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். மிகவும் அன்பானவர். மிகவும் புத்திசாலி. ஆனால் அந்த புத்திசாலித்தனம் மொத்தமும் எப்போதுமே நல்ல விஷயங்களுக்கு மட்டும் தான்.” என பதில் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement