• Jul 24 2025

ராஜ வாழ்க்கை வாழும் விஜய்... இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா..? இதோ பலருக்கும் தெரிந்திடாத உண்மைகள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தளபதி என்ற அந்தஸ்துடன் முன்னணி சினிமாவில் டாப்பில் இருந்து வருபவர் நடிகர் விஜய். 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் தனது 18 வயதில் நாயகனாக அறிமுகமான விஜய்க்கு திருப்பு முனையாக அமைந்த படம் 'பூவே உனக்காக'. இதனையடுத்து இவர் நடித்த படங்கள் பலவும் வெற்றிப் படங்களாக மாறத் தொடங்கின.

இவ்வாறாக சினிமாவில் படு பிசியாக இருந்து வரும் விஜய் இதுவரை காலமும் ஒரு படத்துக்கு ரூ.150 கோடி சம்பளமாக வாங்கி வந்த விஜய் 'தளபதி 68' படத்துக்காக ரூ.200 கோடி சம்பளமாக வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.


மேலும் விஜய் அரசியலில் இறங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் தனது 49-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விஜய்யின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.445 கோடி இருக்குமாம். அத்தோடு விஜய்க்கு சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் வீடுகள் உள்ளன. 

அதுமட்டுமல்லாது விஜய்க்கு எக்கச்சக்கமான சொகுசு கார்கள் உள்ளன. அந்தவகையில் அவரிடம் பி.எம்.டபிள்யூ X5 மற்றும் X6, ஆடி A8 L, ரேஞ்ச் ரோவர் எவோக், ஃபோர்டு மஸ்டாங், வால்வோ XC90, மெர்சிடிஸ் பென்ஸ் GLA, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், இன்னோவா எனப் பல கார்கள் உண்டு.


மேலும் விஜய்க்கு சினிமாவைத்தாண்டி விளம்பரங்கள் மூலம் மட்டும் ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் கிடைத்து வருகிறது. அத்தோடு விஜய் பெயரில் சென்னையில் நிறைய திருமண மண்டபங்களும் உள்ளன. அவற்றையெல்லாம் வாடகைக்கு விட்டுள்ளமையினால் அதன்மூலமும் கோடிக்கணக்கில் அவருக்கு வருமானம் வருகிறதாக கூறப்படுகின்றது.

இவ்வாறாக விஜய் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரனாக ராஜவாழ்க்கை வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement