• Jul 25 2025

தமிழ் ஜெயிக்கக் கூடாது என்பதற்காக அர்ஜுனுடன் சேர்ந்து கார்த்திக் செய்த காரியம்- அதிர்ச்சியில் உறைந்த நடேசன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழ் கம்பனி முதலாளிகளிடம் தபன் பேசவில்லை. அது பேக் கோஃல் என்பதை நிரூபித்து விடுகின்றார். இதனால் சரஸ்வதி, தமிழ், நமச்சி மூவரும் அர்ஜுனை வெறுப் பேற்றுகின்றனர். தொடர்ந்து தமிழ் தப்பு பண்ணல என்ற விஷயத்தை கோதையின் கணவர் வசுவிடம் சொல்ல வசு சந்தோஷப்படுகின்றார்.


பின்னர் கோதை சின்னக் கம்பனி முதலாளிகளைச் சந்தித்து தான் அவர்களுக்கு செய்த நல்ல விஷயத்தை எல்லாம் திரும்பக் கூற அவர்களும் கோதைக்கே ஓட்டுப் போடுவதாக சொல்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நடேசன் செய்தது எல்லாம் சொல்லிக் காட்டக்கூடாது என்று சொல்லுவா இப்போ அவளே அதெல்லாம் பண்ணுறாளே என்று யோசிக்கின்றார்.

பின்னர் கோயிலில் சரஸ்வதியைச் சந்தித்து கோதை பண்ணும் விடயத்தை எல்லாம் கூறுகின்றார். இதைக் கேட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்த சரஸ்வதி தமிழிடம் அத்தை சின்னக் கம்பனி முதலாளிகளை சந்தித்து பேசினாங்க என்று சொல்ல, தமிழ் என்ன நடந்தாலும் நம்பிக்கையோடு இருப்போம்.

நமக்கு தான் வெற்றி என்றால் அதனை யாராலும் தடுக்க முடியாது என்று கூறுகின்றார். இரவு நேரம் ஆனதும் கோதை நாளைக்கு எலக்ஷ்ன் ரொம்பவே பதட்டமாக இருக்கு என்னை காலையில சீக்கிரமா எழுப்பி விடுங்க நான் போய் துாங்கிறேன் என்று செல்ல, அர்ஜுன் கார்த்திக்கிடம் பேசுவதைப் பார்க்கின்றார்.


அப்போது அர்ஜுன் கார்த்திக்கிடம் தமிழ் ஜெயிலுக்கு போன விஷயத்தை எல்லோருக்கும் திரும்ப நினைவுபடுத்தனும், அவர் ஜெயிலில் இருந்த போட்டோவை போஸ்டர் அடிச்சு ஒட்டலாம் என்று சொல்ல நடேசன் வந்து அதெல்லாம் பண்ண வேணாம் என்று சொல்ல கார்த்திக் அர்ஜுனின் சொல்லைக் கேட்டு அதனைச் செய்கின்றார்.

காலையில் கம்பனி ஓனர்சை சந்தித்த நமச்சி அவர்கள் தமிழுக்கு ஓட்டுப் போட முடியாது என்றும் போஸ்டர் விஷயத்தைக் கூற போஸ்டரைப் பார்த்த நமச்சி அதிர்ச்சியடைந்து அந்த போஸ்டரை போட்டோ பிடித்து தமிழிடம் கொண்டு போய் காட்டுகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிகின்றது.


Advertisement

Advertisement