• Jul 24 2025

விஜய் அதை மட்டும் செய்யவே மாட்டார்: பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நேற்று சனிக்கிழமை  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது, இதில் இந்த படத்தில் நடித்துள்ள பிரபலங்கள் மட்டும் இன்றி, ஏகப்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

குறிப்பாக நடிகர் விஜய் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில், என்ன பேசுவார் என்பதை கேட்பதற்காகவே பல ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு, ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து இருந்தனர்.


வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பலரும் மேடையில் படம் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறி வந்தார்கள்.

மேடையில் ஜானி மாஸ்டர் மற்றும் ஹீரோயின் ராஷ்மிகா இருவரும் மேடையில் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடி இருந்தனர். அது ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.


விஜய் உடன் வாரிசு படத்தில் ஒரு வருடமாக நடித்தது பற்றி பிக் பாஸ் புகழ் நடிகை சம்யுக்தா பேசி இருக்கிறார்.

"விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாளும் போன் பயன்படுத்தியது இல்லை. கேரவனுக்கு கூட போகமாட்டார். நான் அங்கு புதுமுகம், ஆனால் படத்தில் நடித்த மற்றவர்கள் எல்லாரும் லெஜண்ட்ஸ்" என சம்யுக்தா கூறியுள்ளார்.


Advertisement

Advertisement