• Jul 25 2025

விஜய்யின் கன்னத்தில் பலத்த அறை விட்ட தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்... பிரபல நடிகர் கூறிய திடுக்கிடும் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்க்கும் அவரின் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட சிறு சிறு முரண்பாடுகளின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இருப்பினும் ஆரம்பத்தில் விஜய் சினிமாவில் நடிப்பதில் எஸ்ஏசிக்கு விருப்பம் இல்லை. இருப்பினும் விஜய் பிடிவாதமாக இருந்த காரணத்தினால் தான் அவரை சினிமாவில் நடிக்க அனுமதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் நடிகர் பொன்னம்பலம் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் உள்ள உறவு குறித்து ஓப்பனாக கூறியுள்ளார். அதாவது விஜய்யுடன் ஆரம்ப காலத்தில் இருந்தே பல படங்களில் பணியாற்றியுள்ளார் பொன்னம்பலம்.


அந்தவகையில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய செந்தூரப்பாண்டி படத்தில் விஜய் நடிக்கும் போது ஆரம்ப காலம் என்பதால் சிறுசிறு தவறுகளை விஜய் செய்துள்ளார். இதனால் கடுப்பான எஸ்ஏசி படப்பிடிப்பிலேயே விஜய்யை அனைவரது முன்னிலையிலும் கன்னத்திலேயே கோபத்தில் பலமாக அறைந்துள்ளார். 

இதன் காரணமாக படப்பிடிப்பு தளமே அந்த நேரத்தில் அதிர்ச்சி அடைந்ததாம். இதை பார்த்துக் கொண்டிருந்த நடிகர் பொன்னம்பலம் ஓடிப்போய் எஸ்.ஏ.சியிடம் "என்ன சார், பொது இடத்தில் இப்படி உங்க மகனை அடிக்கலாமா" என கேட்டாராம்.


அதுமட்டுமல்லாது " இப்பொழுது விஜய் உங்கள் மகன் இல்லை இந்தப் படத்தின் ஹீரோ" என்று விஜய்க்கு ஆதரவாக பேசினாராம். இப்படி ஆரம்பத்திலேயே விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த தான் இப்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளேன், ஆனால் விஜய் ஒரு போன் கூட பண்ணி விசாரிக்கவில்லை எனக் கூறி மிகவும் வருத்தப்பட்டுள்ளார். 

எது எவ்வாறாயினும் படப்பிடிப்பு தளத்திலேயே விஜய்யை எஸ்ஏசி அடித்த தகவல் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement