• Jul 26 2025

பிரபல இயக்குநரை கோர்ட்டில் நேரடியாக மன்னிப்புக் கேட்க வைத்த நீதிமன்றம்.. நடந்தது என்ன..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மராட்டிய மாநிலத்தில் உள்ள பீமா கொரோகானில் கடந்த 2018-இல் நடந்த பேரணியில் பலத்த வன்முறை ஒன்று ஏற்பட்டது. இது குறித்து சமூக ஆர்வலர் கவுதம் நவ்லாகா உள்ளிட்ட ஒரு சிலரைப் போலீசார் கைது செய்திருந்தனர்.


இதன் பின்னர் கவுதம் நவ்லாகாவை கோர்ட்டு விடுதலை செய்தது. இருப்பினும் நீதிபதியின் இந்த விடுதலை உத்தரவை பலரும் கடுமையாக விமர்சித்தனர். அந்தவகையில் காஷ்மீர் பைல்ஸ் படம் மூலம் பிரபலமான டைரக்டர் விவேக் அக்னிஹோத்ரியும் நீதிபதி தீர்ப்பை விமர்சித்து டுவிட்டரில் எதிர்மறைக் கருத்து பதிவிட்டார்.


இதனையடுத்து விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட சிலர் மீது டெல்லி ஐகோர்ட்டு தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் வீடியோ கான்பரஸ் மூலம் விவேக் அக்னிஹோத்ரி ஆஜராகி மன்னிப்பு கேட்டார். அதை ஏற்காத நீதிபதி நேரில் ஆஜராக கூறி உத்தரவிட்டார்.


இதனைத் தொடர்ந்து விவேக் அக்னிஹோத்ரி கோர்ட்டில் நேரில் ஆஜராகி நீதிபதிக்கு எதிராக டுவிட்டரில் வெளியிட்ட பதிவுக்காக மன்னிப்பு கேட்டார். இதை கோர்ட்டு ஏற்றுக்கொண்டு இந்த வழக்கை சுமூகமாக முடித்து வைத்தது.


Advertisement

Advertisement