• Jul 25 2025

இயக்குநர் மணிரத்தினத்தால் விக்ரம் பட நடிகர் அர்ஜுன் தாஸிற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்- அடப்பாவமே! இதெல்லாம் ஒரு காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


“மௌனகுரு”, “மகாமுனி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சாந்தகுமார்.இந்தத் திரைப்படங்கள் இரண்டுமே ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோரின் நடிப்பில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் சாந்தகுமார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் பகுதியில் நடைபெற்றதாம். 


அப்போது மணி ரத்னம் தங்கி இருந்த விருந்தினர் மாளிகைக்கு அருகே அவர்கள் ஒரு காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தார்களாம்.

அங்கே மணி ரத்னத்தின் விருந்தினர் மாளிகை அமைந்திருக்கிறது என்ற செய்தி படக்குழுவினருக்குத் தெரியாதாம். அப்போது படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஒரு பிரம்மாண்ட விளக்கின் வெளிச்சம் மணி ரத்னத்தின் வீட்டிற்குள்ளே தற்செயலாக புகுந்துவிட்டதாம். 

இந்த சம்பவத்திற்கு பிறகு சில மணி நேரங்களில் அந்த இடத்திற்கு சில காவலர்கள் வந்திருக்கிறார்கள்.“இங்கே அருகில் மணி ரத்னத்தின் வீடு இருக்கிறது. அங்கே அவர் இப்போது தங்கியிருக்கிறார். அவரை நீங்கள் தொந்தரவு செய்வதாக எங்களுக்கு புகார் வந்திருக்கிறது” என கூறினார்களாம். 


இதனை கேட்ட படக்குழுவினர் ஷாக் ஆகிவிட்டனராம். இதனை தொடர்ந்து அந்த இடத்தை காலி செய்யுமாறு படக்குழுவினரிடம் கூறினார்களாம் காவலர்கள். ஆதலால் சாந்தகுமார் தனது திரைப்படத்தின் படப்பிடிப்பை வேறு பகுதிக்கு மாற்றிவிட்டாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement