• Jul 25 2025

தங்கலான் படத்திற்காக மோசமாக கெட்டப்பை மாற்றிய விக்ரம்- ஆள் அடையாளம் கூட தெரியலையே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடிய நடிகராக விளங்குபவர் தான் விக்ரம். கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர் தோல்வியையே சந்தித்து வருகின்றன.இருப்பினும் இறுதியாக வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.


இதனை அடுத்து தற்பொழுது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் நடிகர் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 


தங்கலான் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளியன்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில், தங்கலான் படத்துக்காக நடிகர் சீயான் விக்ரம், வித்தியாசமான கெட் அப்பில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


நீண்ட, அடர்த்தியான தாடியுடன் இருக்கும் விக்ரமின் நியூ லுக் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சூப்பராக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement