• Jul 25 2025

அசீமை ஒரே ஒரு கேள்வியால் லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய விக்ரமன்- வித்தியாசமான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீடு ராயல் மியூசியமாக கடந்த வாரம் மாறிய போதே ஏகப்பட்ட பஞ்சாயத்து கிளம்பின. இந்நிலையில், இந்த வாரம் நீதிமன்றமாகவே மாறி உள்ளது. நேற்றைய தினம் அமுதவாணன் விக்ரமன் மீதும், தனலட்சுமி தலைவராக நினைத்து முடியாமல் போனது குறித்தும் வழக்குகளை கொடுத்திருந்தனர்.

குறிப்பாக அமுதவாணன் வழக்கை அசீம் எடுத்து வாதாடினார்.அவருக்கு எதிரான வாதத்தினை ஷிவின் எடுத்து நடத்தி வந்தார். இறுதியாக பல குழப்பங்களின் மத்தியில் ஷிவினின் தரப்பு வெற்றி பெற்றது.

அந்த வகையில் இந்த வாதம் இந்த வாரமும் தொடர்கின்றது.அதில் அசீம் ராஜா ராணி டாஸ்க்கில் சாவியை எடுத்து ஒழித்து வைத்தது குறித்த வழக்கை தொடுத்துள்ளார்.இவருக்கு ஆதரவாக ஷிவின் வாதாடுகின்றார்.

ஏடிகேவிற்கு ஆதரவாக விக்ரமன் வாதாடுகின்றார்.அதில் நீங்கள் ஏடிகே சாவியைக் கேட்ட போதே கொடுத்திருக்கிலாம் தானே எனற்காக மனிமாபிமானமின்றி செயற்பட்டீர்கள் என்ற மாதிரி கேட்கிறார். அதற்கு அசீம் அமைதியாக நிறக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.



Advertisement

Advertisement