• Jul 25 2025

விக்ரமன் தான் இறுதிப் போட்டிக்கு போவாரு- அசீமை கடுப்பாக்கிய ஹவுஸ்மேட்ஸ்- நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்தது. தற்பொழுது 9 போட்டியாளர்கள் மாத்திரமே உள்ளனர். அந்த வகையில் 82ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

அதாவது இந்த வாரம் முழுக்க ப்ரீஸ் டாஸ்க் நடந்தது. அதில் போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.இதனால் ஹவுஸ்மேட்ஸ் செம குஷியில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து புதிய டாஸ்க் ஒன்று நடந்தது.

அதாவது நான் இந்த நிகழ்ச்சியின் இறுதிக்கு தகுதியானவன் என்று காரணம் கூற வேண்டும் தன்னுடன் யார் இறுதிப் போட்டிக்கு வருவாங்க என்றும் கூறவேண்டும். இவ்வாறு கூறும் கருத்து சரியாக இருந்தால்  அவங்களுக்கு சார்பாக குவளையில் மற்றவர்கள் மண் போட வேண்டும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். அதன்படி போட்டியாளர்கள் கேமை ஆரம்பித்தனர்.


இதில் நிறைய பேர் மற்றவங்களை கம்பயரிங் பண்ணி பேசிட்டு இருந்தாங்க. அதில் மைனா நந்தினி பேசும் போது விக்ரமன் இறுதிச் சுற்றுக்கு வருவார் என்று கூறினார். அப்போது விக்ரமன் நான் இறுதி சுற்று வரையில் செல்வேன் என கூறியதற்கு நன்றி. ஆனால், என்னை கருத்துக்களை மட்டுமே கூறுபவர் என நீங்கள் கருதுகிறீர்கள். அப்படி இருக்க, எப்போதும் கருத்தை மட்டுமே சொல்பவரை எப்படி மக்கள் இறுதி சுற்று வரையில் செல்ல அனுமதிப்பார்கள்?" எனக் கேட்கிறார்.

இதற்கு பதில் அளிக்கும் மைனா,"போட்டிகளில் அனைத்து விதமான டாஸ்க்குகளிலும் சிறப்பான முயற்சியை அளித்திருக்கிறீர்கள். 70 சதவீதம் கருத்து சொன்னாலும், 30 சதவீதம் சிறப்பாக போட்டியில் பங்கெடுத்துள்ளீர்கள்" என்கிறார். அப்போது விக்ரமன்,"அதைத்தான் நானும் கேட்கிறேன். 70 சதவீதம் கருத்து மட்டுமே சொல்றவர் போலியா இருப்பாரு. அவரை எப்படி மக்கள் தேர்ந்தெடுப்பாங்க?" என வினவுகிறார். இதற்கு பதில் அளிக்கும் மைனா,"மக்களுக்கு நீங்கள் சொல்லும் கருத்துக்கள் பிடித்திருக்கலாம். அதுவே உங்களுக்கு ஓட்டு அளிக்க செய்திருக்கலாம்" என்கிறார். இதை விக்ரமன் ஆமோதிக்கிறார்.


அதிலும் ரச்சிதா அசீம் இந்த வீட்டில ஒழுக்கமில்லாதவர் என்று பேசினார். இதனால் அசீம் கடுப்பாகி ரச்சிதாவுக்கு தனது கருத்துக்களை எடுத்து வைத்தார். அதன் பின்னர் அமுதவாணனால் விக்ரமனுக்கும் அசீமுக்கும் இடையில் சிறிய வாக்கு வாதம் நடந்தது.

இவ்வாறு போட்டியாளர்கள் மற்றவர்களை குறை சொல்லி தம்மை பற்றி கூறினார்கள். இந்த டாஸ்க்கில் ஏடிகே வெற்றி பெற்றார்.மேலும் இந்த டாஸ்க்கினை அசீம் மட்டும் தான் புரிந்து கொண்டு விளையாடினார்.அத்தோடு அவர் தன் குறித்து எடுது்து வைத்த கருத்துக்களும் சரியாக இருந்தது என்பதும் குறி்பிடத்தக்கது.


Advertisement

Advertisement