• Jul 24 2025

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி வீட்டில் நடந்த விஷேசம்- அவர்களே பதிவிட்ட வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தற்போது சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்துவரும் மகாலட்சுமி, கடந்த ஆண்டு ரவீந்தரைத் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்குப் பிறகு தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர்கள் அடிக்கடி தமது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

மேலும் இதுவரை படங்கள் தயாரித்த ரவீந்தர் தற்பொழுது சீரியலையும் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் முன்னதாகவே கேமராவை பிக்ஸ் செய்துவிடுவார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் வகையில் இருவரும் செல்லும் இடங்களின் அப்டேட் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது தன்னுடைய வீட்டில் சண்டி ஹோமத்தை நடத்தியுள்ளார் தயாரிப்பாளர் ரவீந்தர். இந்த ஹோமத்தின் காட்சிகளையும், ஹோமத்தில் மகாலட்சுமி பங்கேற்றுள்ளதையும் வீடியோவாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.


 மேலும் இந்த சண்டி ஹோமம் மூலம் தங்கள் மீது அதிகமான நம்பிக்கை மற்றும் அன்பை வைத்துள்ளவர்களுக்காக தாங்கள் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement