• Jul 23 2025

வித்தைக்காரன் திரைப்பட முதல் சிங்கிள் “லைஃப் இஸ் மேஜிக்” பாடல் வெளியீடு ! அட்டகாசமான மெலடி..!!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குனரான  வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகானாக நடிக்கும், வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படம் தான்  வித்தைக்காரன். ப்ளாக் காமெடியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைக் குவித்த நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் “லைஃப் இஸ் மேஜிக்”   பாடல் வெளியாகியுள்ளது.


காமெடி நடிகராக அறிமுகமாகி வெற்றிகரமான நாயகனாக வலம் வரும் சதீஷ் இப்படத்தில் நாயகானாகவும். நாயகியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மதுசூதனன் ராவ், சுப்பிரமணிய சிவா, ஜான் விஜய், ஆஷிஃப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்ட  நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

https://youtu.be/C5KJivAypmI?si=Lzt-BVjhS_IkPIN0

Advertisement

Advertisement