• Jul 25 2025

வாரிசு திரைப்படம் அந்த படத்தின் அப்பட்டமான காப்பி- பரபரப்பபை ஏற்படுத்திய பயில்வானின் விமர்சனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் முறையாக நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இன்று காலை 4 மணிக்கு ஸ்பெஷல் காட்சிகளுடன் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் நேற்று இரவே சினிமா பிரபலங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஸ்பெஷல் காட்சி திரையிட்டுள்ளார் நடிகர் விஜய்.

 வாரிசு படத்தை பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் வாரிசு படம் குறித்த தனது விமர்சனத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது 


 சரத்குமர் - ஜெயசுதா தம்பதியின் மூன்றாவது மகனான விஜய் குடும்பத்தை பிரிந்து தொழில் செய்து வருகிறார். திடீரென சரத்குமாருக்கு கடுமையான நோய் பாதிப்பு ஏற்படுவதால் அவருக்கு 60ஆம் கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறார் ஜெயசுதா.இதற்காக 7 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டிற்கு வரும் விஜய், குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை கண்டறிகிறார். இறுதியில் குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறாரா? அப்பாவுக்கும் தனக்குமான கருத்து வேறுபாட்டை சரி செய்கிறாரா என்பதுதான் கதை. 

விஜய் பல வருடங்களுக்கு பிறகு ஒரு மென்மையான ஹீரோவாக புதிய பரிணாமத்தில் நடித்துள்ளார். வில்லன்களுடன் பேசும் போது குரல் மற்றும் பாடி லாங்குவேஜ்ஜில் வித்தியாசம் காட்டுகிறார். டான்ஸிலும் வித்தியாசமாக முயற்சி செய்துள்ளார். விஜய்யின் வித்தியாசத்திற்கு திரையரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது.முக்கியமாக யோகி பாபு விஜய்யின் காமெடியை ரசிகர்கள் கைத்தட்டி கொண்டாடுகின்றனர். 


பல இடங்களில் நடிகர் விஜய் மனதை கசக்கி பிழிந்து கண்ணீர் விட வைக்கிறார். சோக காட்சிகளில் தனது நடிப்பின் பரிணாம வளர்ச்சியை முழுமையாக காட்டியுள்ளார் விஜய். நடிகை ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி அதிகம் காட்டி ரசிகர்களை கட்டிப்போடுகிறார். அம்மாவாக ஜெயசுதா பாத்திரத்தை உணர்ந்து அலட்டிக் கொள்ளாமல் அருமையாக நடித்துள்ளார். இயக்குநர் வம்சி அவரிடம் நன்றாக வேலை வாங்கியுள்ளார்.முமையான அப்பாவாக நடித்துள்ளார் சரத்குமார். சோகத்தின் உச்சக்கட்டத்தில் நடித்துள்ளார். 

இதுவரை பார்த்த சரத்குமார் வேறு இந்தப் படத்தில் உள்ள சரத்குமார் வேறு. நடிகர் ஷாம் விஜய்யின் அண்ணனாக நடித்துள்ளார். சரியான வில்லனாக மிரட்டியுள்ளார். இதேபோல் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்தும் விஜய்க்கு அண்ணனாக வில்லத்தனம் செய்துள்ளார். விஜய்யின் பிஸ்னஸுக்கு ஃபைனான்சியராக வரும் எஸ் ஜே சூர்யா 3 காட்சிகளில் நடித்து அனைவரையும் தூக்கி சாப்பிடுகிறார். பிரகாஷ் ராஜ் வழக்கமான வில்லனாக ரகுவரன் ஸ்டைல் ஃபாலோ பண்ணியுள்ளார். அருமையான ஒளிப்பதிவு, ஆனால் பல காட்சிகள் கிராஃபிக்ஸ் என்பது தெரிகிறது. 


 ஆனால் வாரிசு திரைப்படம், நடிகர் சிவாஜி கணேசனின் படிக்காத மேதை படத்தின் அப்பட்டமான காப்பி. அந்தப் படத்தின் கதைதான் வாரிசு. ரங்கா ராவ் வேடத்தில் சரத்குமார், சவுக்கார் ஜானகி கதாப்பாத்திரத்தில் ராஷ்மிகா. அந்தப் படத்தில் 3 மகன்களும் அப்பாவுக்கு துரோகம் செய்வார்கள், இறுதியில் சிவாஜிதான் சொத்தையெல்லாம் மீட்பார். இரண்டு படங்களின் கதையும் ஒன்றுதான். இடைவெளிக்கு பிறகு படம் தொய்வாக உள்ளது என்று கூறியுள்ளார்.பயில்வான் ரங்கநாதனின் இந்த விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement