• Jul 25 2025

இலியானாவின் கர்ப்பத்துக்கு காரணமானவர் இவரா? நெருக்கமான புகைப்படத்தை பதிவுசெய்த நடிகை!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2006 ஆம் ஆண்டு ’கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இலியானா, ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.இருவருக்கென ரசிகர் பட்டாளமே உண்டு.

 இந்த நிலையில் இலியானா ஒரு சில பிரபலங்களுடன் டேட்டிங்கில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் தனது காதலரை இதுவரை அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த இலியானா அவ்வப்போது கர்ப்பத்துடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்து வந்தார். இந்த நிலையில் சற்று மங்கலாக தன்னுடைய ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

 

அதில் ''கர்ப்பமாக இருப்பது ஒரு அழகான பாக்கியம்... இதை அனுபவிக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி என்று நான் நினைக்கவில்லை, எனவே இந்த பயணத்தில் நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன். நமக்குள் வளரும் ஒரு வாழ்க்கையை உணர்வது எவ்வளவு இனிமையானது என்பதை என்னால் விவரிக்க முடியாது. பெரும்பாலான நாட்களில் நான் என் கர்ப்பமான வயிற்றை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

மேலும் நான் எப்படிப்பட்ட தாயாக இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், நான் இந்த குழந்தையை மிகவும் நேசிக்கிறேன், இப்போதைக்கு அது போதும் என்று நினைக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement