• Jul 24 2025

வருமா வராதா வாடிவாசல்.? வெறுத்துப்போன சூர்யா..அடுத்த கூட்டணிக்கு ரெடி..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சூர்யா, விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் என்ற கேரக்டர் ஐந்து நிமிடமாக இருந்தாலும் அதனுடைய தாக்கம் பெரிய உச்சத்திற்கு போய்விட்டது. இதனை வைத்து இவருடைய அந்தஸ்து பல மடங்காக கூடிவிட்டது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படம் பத்து மொழிகளில் உருவாக்கி மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து ஏற்கனவே பல மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தை தொடங்குவாரா என்ற ஆவல் எல்லோருக்குமே உண்டு . தற்போது கங்குவா படப்பிடிப்பு முடிந்த பிறகு வாடிவாசல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று ரொம்பவே எதிர்பார்ப்புடன் இவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் தற்போது  வாடிவாசல் படம் வருமா வராதா என்று மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது. இதைப் பற்றி வெற்றிமாறனிடம் கேட்டபொழுது அவர் ஒவ்வொரு முறையும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறார். அத்துடன் தற்போது வெற்றிமாறனின் முழு கவனமும் விடுதலை 2 படத்தின்  மீதாகும்.

இதனால் சூர்யாவை ரொம்ப அலட்சியம் செய்யும் விதமாக வாடிவாசல் படத்தை கிடப்பில் போட்டு விட்டார். இதனால் வெறுத்துப் போன சூர்யா இந்த இடைவெளிக்குள் ஒரு கமர்சியல் படத்தை கொடுத்து விடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். அதற்காகத்தான் எப்போதுமே இவர் பக்கத்தில் தயாராக ஒரு இயக்குநரை கைவசம் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement