• Jul 23 2025

முதன் முறையாகத் தனது திருமணப் புகைப்படங்களை வெளியிட்ட ஹன்ஷிகா... ப்பா என்ன ஒரு அழகு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்ஷிகா தற்போது திருமண பந்தத்தில் இணைந்து இருக்கின்றார். அதாவது ஹன்சிகா தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னரும், மற்றும் தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கதுரியா என்பவரைத் தான் திருமணம் செய்து கொண்டு உள்ளார்.

இதைத்தொடர்ந்து இவருடைய திருமண சடங்குகள் கோலாகலமாக நடந்து வந்தன. மேலும் ஏற்கனவே கடந்த மாதம் 22 ஆம் தேதி, ஹன்சிகா மற்றும் சோஹைல் கதுரியா இருவருக்கும் மாதா கி சோகி என்கிற சடங்கு நடந்த போது, ஹன்சிகா மற்றும் மணமகன் ஆகிய சோஹைல் கதுரியா இருவரும் சிகப்பு நிற உடையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 


மேலும் ஹன்சிகா - சோஹைல் கதூரியா ஜோடியின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் தற்போது ஹன்ஷிகா முதன் முறையாக தனது திருமணப் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். அதற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement