• Jul 23 2025

கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்ட பாரதி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட் – இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

 இன்றைய எபிசோடில் ஹேமா பயமா இருக்கு என மேலே இருந்து அழ எல்லோரும் ஆடாம அசையாம அப்படியே இரு என கீழே இருக்கும் எல்லோரும் பதறுகின்றனர்.


அடுத்து அகிலன் மேலே கதவை உடைத்துச் சென்று ஹேமாவை காப்பாற்றி அழைத்து வர பாரதி கண்ணம்மாவிடம் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறார் .ஹேமா லட்சுமி என இருவரும் என்னுடைய குழந்தைகள் என நான் புரிஞ்சுகிட்டேன் என சொல்லி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த விஷயம் பற்றி சொல்கிறார்.

அத்தோடு உடனே இடையில் புகும் வெண்பா இது கண்டிப்பா உண்மை இருக்காது எதுவும் தகிட தத்தம் வேலை நடந்து இருக்கு. நீ  டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த விஷயம் யாருக்காவது தெரியுமா என கேட்க அகிலனுக்குத் தெரியும் என பாரதி கூறுகிறார்.


அப்போ அகிலன் தான் இதை மாத்தி இருக்கணும் என வெண்பா உறுதியாக சொல்ல பாரதி மீண்டும் பழையபடி யோசிக்க தொடங்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement