• Jul 26 2025

கடவுள் இளமையில் எனக்கு தரல முதுமையில் தந்ததை யாராலும் தடுக்க முடில- கம்பீரமாக பேசிய ரமணியம்மாள்- ஷு தமிழ் வெளியிட்ட வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஏகப்பட்ட போட்டியாளர்களை வீழ்த்தி ரன்னர் அப் ஆன ரமணி பாட்டி காலமானார். அவருக்கு வயது 66. வீட்டு வேலை செய்து வந்த ரமணியம்மாள் குரலில் உள்ள அந்த கான சக்தி அவரை ரியாலிட்டி ஷோவுக்கு கொண்டு வந்தது மட்டுமின்றி வெற்றிவாகையையும் சூட வைத்தது.

ஷு தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்ற ரமணியம்மாள் சில திரைப்பட பாடல்களை பாடி வந்த நிலையில், திடீரென உடல்நலக் குறைவு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


ரமணியம்மாள் மறைவு இசை உலகத்தையும் சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என ஆழ்ந்த இரங்கல்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ரமணியம்மாள் பிரபலங்கள் முன்னாடி பாடிய பாடல்களை ஷு தமிழ் தொலைக்காட்சி ஒரு தொகுப்பாக வெளியிட்டு மிஸ்யூ ரமணியம்மா என்று பதிவிட்டுள்ளது.அதில் ரமணியம்மா கடவுள் இளமையில் எனக்கு தரல. ஆனால் முதுமையில் எனக்கு தரணும் என்பதை யாராலும் தடுக்க முடில என்று கம்பீரமாக கூறியுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் மிஸ்யூ ராக்ஸ்டார் என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







Advertisement

Advertisement