• Jul 26 2025

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி.. 15 ஆண்டுகளை நிறைவு செய்த 'யாரடி நீ மோகினி'..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'யாரடி நீ மோகினி'. அதாவது தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே படத்தைத் தான் அவரது உதவி இயக்குநராக பணியாற்றிய மித்ரன் ஆர் ஜவகர் தமிழில் யாரடி நீ மோகினி ஆக ரீமேக் செய்தார். 


இந்தப் படத்தில் தனுஷ், நயன்தாராவோடு இணைந்து பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத், கருணாஸ், கார்த்திக் குமார், ரகுவரன், சரண்யா மோகன்,சுகுமாரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தனுஷூக்கு பேமிலி ஆடியன்ஸ் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் வாயிலாகத் தான் கிடைத்தனர். 


மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இன்றளவும் ரசிகர்களின் மனதில் பதிந்து இருக்கின்றது. அதுமட்டுமல்லாது பாடல்களும் சூப்பர் ஹிட்டான நிலையில் தமிழ் சினிமாவின் சூப்பரான குடும்ப திரைப்படங்களில் 'யாரடி நீ மோகினி' யும் இடம் பெற்றுள்ளது. 


இவ்வாறு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்த இப்படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது. 

Advertisement

Advertisement