• Jul 25 2025

கத்தியால் குத்திய ரவுடிக் கும்பல்.. தமிழ் மேல் பழி போடும் அர்ஜுன்.. நடந்தது என்ன..? பரபரப்பான திருப்பங்களுடன் 'தமிழும் சரஸ்வதியும்' ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்பொழுது சூப்பர் ஹிட்டாகவும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பின் மத்தியிலும் ஒளிரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தமிழும் சரஸ்வதியும்'.

அந்த வகையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கின்றது. இதில் தமிழ் அர்ஜுனைப் பார்த்து "நீ மட்டும் chairman ஐயும் என் குடும்பத்தையும் பிரிக்கணும் என்று நினைச்சியோ உன்னை உயிரோட விட மாட்டேன், உன் சாவு என் கையில் தான்டா" எனக் கூறி விட்டுச் செல்கின்றார். 


அதன் பின்பு மறுபக்கத்தில் மீண்டும் வந்து காரில் இருந்து கீழே இறங்கிய தமிழ் அர்ஜுனைப் பார்த்து "அர்ஜுன் என்ன வேலை பண்ணி வைத்திருக்கின்றாய்" எனக் கேட்கின்றார். இதையடுத்து ராகினி அர்ஜுனை கூப்பிடுகின்றார். ராகினியின் அருகில் சென்ற அர்ஜுன் "அவர் என்னைக் கூப்பிட்டு மிரட்டுகின்றார்" எனக் கூறுகின்றார். 

சிறிது நேரத்தின் பின் மீண்டும் தமிழ் இருக்கும் இடத்திற்கு வருகின்றார் அர்ஜுன். அந்த சமயத்தில் ரவுடிக் கும்பல் ஒன்று வந்து அர்ஜுனைக் கத்தியால் குத்துகின்றனர். தடுக்க சென்ற தமிழையும் பிடித்து வைத்துக் கொண்டார்கள். ரவுடிக் கும்பல் சென்ற பின்பு தமிழ் அர்ஜுன் உடலில் குத்தி இருந்த கத்தியை தனது கையில் எடுக்கின்றார்.


உடனே அர்ஜுன் "ராகினி" எனக் கத்துகின்றார். அந்த இடத்திற்கு ஓடி வந்த ராகினி தமிழைப் பார்த்து "என்ன பண்ணினாய்" அழுத வண்ணம் கேட்கின்றார். அதற்கு அர்ஜுன் "ஏன் சார் என்னைக் குத்தினீங்க" எனக் கேட்டு பழியை தமிழ் மேல் போடுகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.


Advertisement

Advertisement