• Jul 25 2025

காந்தாரா பஞ்சுருளி கெட்டப்பில்..குக் வித் கோமாளி புகழ்.. வைரல் வீடியோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

காந்தாரா பஞ்சுருளி கெட்டப்பில்..குக் வித் கோமாளி புகழ்.. வைரல் வீடியோ இதோ!

கன்னட மொழியில் உருவாகிய திரைப்படமான 'காந்தாரா' கடந்தாண்டு செப்டம்பர் 30 அன்று கன்னட மொழியில் வெளியானது. காந்தாரா படம், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நல்ல  விமர்சனங்களைப் பெற்றது.

 

இதனால், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் படத்தின் வசூல் அதிகரித்தது. இதே தலைப்புடன் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டிலும் வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 4 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் கோமாளிகள் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றினார்கள் என்பது நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். 

அந்த வகையில் நேற்று கோமாளிகளில் ஒருவரான புகழ், ‘காந்தாரா’ படத்தின் கெட்டப்பை போட்டு வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்குகள் மற்றும் கோமாளிகள் ‘காந்தாரா’ கெட்டப்பில் புகழ் வந்தபோது ஆனந்த கண்ணீர் வடித்தனர் என்பதும் பலர் கைதட்டி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,"இந்த கெட்டப் போடவே எனக்கு 4 மணி நேரம் ஆச்சு. மாபெரும் வெற்றியை இந்த படம் அடைய இதில் உள்ள வேலைப்பாடுகளும் ஒரு காரணம்னு இப்பத்தான் புரியுது. மிகப்பெரிய கலைநயத்தோடு எனக்கு மேக்கப் போட்டு கொடுத்த மேக்கப் மேனுக்கு நன்றி. 

இந்த படத்தின் மூலம் மக்களை வியந்து பார்க்க வைத்தவர் ரிஷப் ஷெட்டி. அதிலிருந்து ஒரு சிறு துளியை மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. அனைத்து பஞ்சுருளி தெய்யம் நடன கலைஞர்களுக்கும்...என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.




 


Advertisement

Advertisement