• Jul 24 2025

ஷாம் வீட்டில் நுழைந்து ரவுடிக் கும்பல் மிரட்டல்.. ஹீரோ போல் வந்து காப்பாற்றிய நடிகர்.. நடந்தது என்ன..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் ஷாம். இவர் பல படங்களிலும் ஹீரோவாக நடித்து வந்த நிலையில் தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார். 


அந்தவகையில் சமீபத்தில் வெளியான 'வாரிசு' படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்து இருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாது அதிகளவான வசூலையும் வாரிக் குவித்து இருக்கின்றது.


இந்நிலையில் ஷாம் பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் பற்றி சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதாவது ஒரு படத்திற்கு முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் டப்பிங் பேச வருவேன் என கரார் ஆக தான் சொன்னதால் அந்த தயாரிப்பாளர் ஷாம் வீட்டுக்கு 10ரவுடிகளை அனுப்பி மிரட்டி இருக்கின்றாராம்.


இதனால் பயந்த ஷாம் உடனே கேப்டன் விஜயகாந்துக்கு போன் செய்து இது பற்றி கூறி இருக்கிறார். இந்தப் பிரச்சினையை நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறிய விஜயகாந்த அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்து 'இனி.. இது என் பிரச்சினை' என கூறி இருக்கிறார்.


அதற்கு பிறகு அந்த பிரச்சினையை விஜயகாந்த் தீர்த்து வைத்துவிட்டார் என ஷாம் அந்தப் பேட்டியில் தெரிவித்து உள்ளார்.  

Advertisement

Advertisement