• Jul 24 2025

ஆமா நான் தான் நம்பர் கொடுத்தேன்.. அதுக்கு என்ன இப்போ..? பொங்கி எழுந்த 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

புகழ்பெற்ற தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் மாரிமுத்து. இவர் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமல்லாது இவர் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற பல படங்களையும் இயக்கியுள்ளார்.


மேலும் தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தச் சூழலில் மாரிமுத்து ஒரு பெண் ஒருவரிடம் ட்விட்டரில் நம்பர் கொடுத்ததாக கடந்த சில நாள்களாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலாவிவருகிறது. 


அதுகுறித்து அவரது மகன் அகிலன் அளித்த விளக்கத்தில் "எனது தந்தையின் தொலைபேசி எண் பலரிடம் இருக்கிறது. அது தற்போது தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து தொலைபேசி வாயிலாக ஊடகம் ஒன்று அவரைத் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து கேட்டது. அப்போது பேசிய அவர் "ஆமாம் நான் ஒரு பெண்ணுக்கு நம்பர் கொடுத்தேன். ஒரு இயக்குநராக, நடிகனாக சினிமாவில் இருக்கும் நான் ஒரு பெண்ணிடம் என்னுடைய தொலைபேசி எண்ணை கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது. 


அதுமட்டுமின்றி என் நம்பரை கொடுப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. அந்தப் பெண் என்னிடம் என்னுடைய நம்பர் கேட்டார். அதனால் நான் கொடுத்தேன். ஆனால் இப்போது புகைப்படம் ஒன்று உலாவுகிறதே அதில் இருக்கும் பெண் இல்லை அவர். அதை சிலர் வேண்டுமென்றே உருவாக்கியிருக்கிறார்கள். இந்த விஷயம் குறித்து என்னிடம் ஒருவர் தகாத முறையில் ஒன்றை கேட்டார். அதற்கு நான் காட்டமாகவே பதிலளித்தேன். இவர்களை எல்லாம் என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை" எனக் கூறி இருக்கின்றார்.

Advertisement

Advertisement