• Jul 26 2025

நடிகர் அமிதாப் பச்சனின் புகைப்படத்தை உபயோகிக்க திடீரென விதிக்கப்பட்ட தடை..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகராக திகழ்பவர் தான்  அமிதாப் பச்சன்.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் நல்ல வசூல் பெற்று வரும்.இ

தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களை கவர்ந்து, மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரையுலக ஆளுமைகளில் இவரும் ஒருவராக காணப்படுவார். இரண்டுமுறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

எனினும்  சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'குட்பை', 'பிரம்மாஸ்திரா' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இவ்வாறுஇருக்கையில், நடிகர் அமிதாப் பச்சனின் பெயர், குரல் போன்றவற்றை பயன்படுத்த டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

அதாவது, அமிதாப் பச்சனின் பெயரில் போலி கோடீஸ்வர நிகழ்ச்சி, லாட்டரி மோசடி நடைபெறுவதாகவும் இவரின் புகைப்படத்தை போஸ்டர்கள், ஆடைகள் போன்றவற்றில் உபயோகிப்பதனால் அமிதாப் பச்சனின் பெயர், குரல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வணிக நோக்கத்துடன் முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமென்று அமிதாப் பச்சன் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

எனினும் இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அமிதாப் பச்சனின் பெயர், குரல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


Advertisement

Advertisement