• Jul 24 2025

நான் அப்போ சொன்னது நடந்து விட்டது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்- தாறுமாறாக புகழ்ந்த பிரபல நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்ச் மிகவும் பிரமாண்டமாக சென்னையிலுள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றது. ஒரு வாரத்திற்கு முன்பு வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு கொடுத்த பேட்டியில் விஜய் தான் தமிழ்நாட்டில் நம்பர் 1 என கூறி இருந்தார். அதை முடிவு செய்ய அவர் யார் என தமிழ் சினிமா விநியோகஸ்தர்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

இந்த பிரச்சனை தற்போது ஒளிந்திருக்கின்றது. மேலும் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.


இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் விஜய் குறித்த பல விடயங்களைக் கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் சரத்குமார் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசி இருக்கும் விஷயம் வைரல் ஆகி இருக்கிறது.


மேடையில் பேசிய சரத்குமார், 'விஜய் தான் வருங்கால சூப்பர்ஸ்டார் என சூர்யவம்சம் படத்தின் 175ம் நாள் விழாவில் கூறி இருந்தேன். அப்போது கலைஞர் கூட நான் சொன்னதை ஆச்சரியமாக பார்த்தார்.''நான் அப்போ சொன்னது இப்போது நடந்துவிட்டது' என சரத்குமார் பேசி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement