• Jul 24 2025

மேடையில் தளபதி செய்த செயலால் மிரண்டு போன பாடகி மானசி- Unexpected moments - இந்த மனசு தானய்யா கடவுள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தற்போது பிரபலங்கள் பலரும் மேடையில் படம் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறி வருகிறார்கள்.மேடையில் ஜானி மாஸ்டர் மற்றும் ஹீரோயின் ராஷ்மிகா இருவரும் மேடையில் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடி இருக்கின்றனர். அது ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

விஜய் உடன் வாரிசு படத்தில் ஒரு வருடமாக நடித்தது பற்றி பிக் பாஸ் புகழ் நடிகை சம்யுக்தா"விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாளும் போன் பயன்படுத்தியது இல்லை. கேரவனுக்கு கூட போகமாட்டார். நான் அங்கு புதுமுகம், ஆனால் படத்தில் நடித்த மற்றவர்கள் எல்லாரும் லெஜண்ட்ஸ்" என்று கூறினார்.


இவரைத் தொடர்ந்து பேசிய சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தேன். அது அப்போது நடந்து விட்டது என்று பெருடையாகக் கூறியிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் விஜய் செய்த ஒரு விடயம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றது. அதாவது மேடையில் நின்ற பாடகி மானசிக்கு பாடுவதற்கு மைஃக் இல்லாத போது விஜய் தானே அந்த மைஃக்கை வாங்கிக் கொண்டு போய் மானிசியின் கையில் கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement