• Jul 25 2025

நடிக்க தொடங்கி சில நாட்களிலே சீரியலை விட்டு விலக காரணம் என்ன ?- முதன்முறையாக மனம் திறந்த சஞ்சீவ்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1989ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பிவ் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன்பின் சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி போன்ற படங்களில் துணை நடிகராக நடித்து வந்த இவர் சின்னத்திரையிலும் கலக்கியுள்ளார். மெட்டி ஒலி தொடர் மூலம் சின்னத்திரையில் கலக்க ஆரம்பித்த இவர் திருமதி செல்வம் தொடர் மூலம் பெரிய ரீச் பெற்றார்.

கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சில நாட்களே இருந்தார்.ராடான் தயாரிப்பில் புதியதாக பூஜை போடப்பட்டு தொடங்கிய தொடர் தான் கிழக்கு வாசல். இதில் நாயகனாக சஞ்சீவ் கமிட்டாகி சில நாட்களே நடித்த நிலையில் அதில் இருந்து விலகியிருக்கிறார்.

இதுகுறித்து சஞ்சீவ் கூறுகையில், படப்பிடிப்பில் இணைந்து சில நாட்கள் நடித்தேன், ஆனால் இப்போது நான் அதில் இல்லை. நீங்க இந்த சீரியல் பண்ணவில்லை என்று என்னிடம் சொல்லிவிட்டார்கள் என கூறினார்.


Advertisement

Advertisement