• Jul 24 2025

என்னடா நடக்குது இங்க- அசீம் மீது ஏறி யானை சவாரி செய்யம் மைனா நந்தினி- மோசமாக கலாய்த்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 65 நாட்களைக் கடந்து விட்டது.அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் மைனா நந்தினி. இவர் ஆரம்பகாலங்களில் சின்னத்திரை சீரியலில் நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து நம்ம வீட்டுப் பிள்ளை, விருமன் மற்றும் விக்ரம் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்திருக்கின்றார்.இருப்பினும் பிக்பாஸில் இவர் விளையாடி வரும் விதம் பார்வையாளர்களை கலகலப்பாக வைத்துள்ளது எனலாம்.


அந்த வகையில் இந்த வாரம் பட்ஜெட் டாஸ்க்கிற்காக பிக் பாஸ் போட்டியாளர்களை தனித்தனியாக கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்து அவர்களிடம் சில பொது அறிவு கேள்விகளை குழந்தைகளே டக்கென சொல்லும் கேள்விகளை கேட்டார்.

ஆனால், அதற்கு மைனா நந்தினி சொன்ன பதில்கள் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இதெல்லாம் எல்கேஜி குழந்தைகளே சொல்லும் என ட்ரோல் செய்து கலாய்த்தனர்.


இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் அசீம் மண்டிப் போட்டு யானை போல நடந்து செல்ல அவர் மீது ஏறிக் கொண்டு மைனா நந்தினி யானை சவாரி செய்யும் வீடியோக்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளன. அசீம் உடன் அப்படி சண்டை போட்டு வந்த மைனாவா இது? இப்படி அவருடன் நெருக்கம் காட்டி வருகிறாரே என கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement