• Jul 25 2025

என்னது AK 62 இல் இரண்டு இயக்குநர்களா..? பின்னணி என்ன.. வெளியானது மற்றுமோர் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் 62-ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயங்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், கடந்த ஆண்டு லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 


அதன் பிறகு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவிருந்த நிலையில், சில காரணங்களால், லைகா புரொடக்ஷன்ஸ் ak62இயக்குநரை மாற்றியதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்தவகையில் ஏகே 62வில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிவிட்டார் என்று பலரும் உறுதியாக கூறி வருகிறார்கள்.


இருப்பினும் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கவுள்ளார் என்றும், அஜித் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் ஏற்கெனவே ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இணைந்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாது பி.எஸ். மித்ரனின் உடைய கதையைத் தான் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.


இவ்வாறு கிசுகிசுக்கபட்ட நிலையில் இவை யாவும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. அதாவது பி.எஸ். மித்ரன் இப்படத்தில் இணையவில்லை. இந்த செய்திகள் அனைத்துமே சமூக வலைத்தள வாசிகளால் பரப்பப்படும் வெறும் வதந்தி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement