• Jul 25 2025

என்னாச்சு...கொடிய நோயால் பாதிக்கப்பட்ட அஜித் பட தயாரிப்பாளர்.. அதிர்ச்சியில் திரையுலகம்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தான் அஜித் குமார். இவரின் வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு உள்ளிட்ட படங்களை தனது நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக எஸ்.எஸ் சக்ரவர்த்தி தயாரித்தார். 

இவர் தயாரிப்பில் அஜித் நடித்த அத்தனை படங்களும் ஹிட்டான நிலையில், இருவரும் நல்ல நண்பர்களாக வலம் வந்தனர். 

இந்நிலையில் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

மேலும் ஒரு வாரத்துக்கு முன்பு தான் அவரது தந்தை காலமானது கூடுதல் சோகத்தை அளிக்கிறது. இதனிடையே இவருக்கு புற்றுநோய் வந்த விஷயம் அஜித்திற்கு தெரியுமா என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. அஜித்துக்கு இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் கட்டாயம் அவர் மன வேதனைக்கு உள்ளாவார். 

Advertisement

Advertisement