• Jul 25 2025

என்னது ஐஸ்வர்யா குடிப்பாங்களா..? ஓப்பனாக அவரே கூறிய பகீர் தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு படத்தின் வாயிலாக முதன் முதலாக ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். மேலும் தமிழில் கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான 'ராசுகுட்டி' என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து 'மில் தொழிலாளி, தையல்காரன், மீரா, உள்ளே வெளியே, காசி,பஞ்சதந்திரம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, ஆறு, பரமசிவம், பிரியசகி, பழனி, அபியும் நானும்' எனப் பல படங்களில் நடித்தார். 


ஹீரோயினாக நடித்து வந்த இவர் தற்போது அக்கா,அம்மா,அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஐஸ்வர்யா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல விடயங்கள் தொடர்பாக ஓப்பனாக பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில் "பெண்கள் தலையை குனிந்துக்கொண்டே செல்வதால், பின்னால் யார் வருகிறார் என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை. பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் கையில் செஃப்டி பின் அல்லது காம்பஸ் வைத்துக்கொள்ள வேண்டும் தப்பான எண்ணத்தில் அருகில் வந்தால் நச்சுனு குத்துவிடுங்கள்" என்று தைரியத்துடன் கூறியுள்ளார்.


அத்தோடு பெண்கள் குடிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் "எல்லாமே ஒரு செயற்கையான மகிழ்ச்சிதான், அதன் பிறகு ரியாலிட்டிக்கு வந்தே தீரவேண்டும். குடிப்பதை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று காட்டாயப்படுத்தி நிறுத்த தேவையில்லை. காலையில் எழுந்ததும் குடிக்கணும்னு தோணுச்சினா நான் குடிப்பேன், ஆனால், அனைத்திற்கும் ஒரு வரைமுறை இருக்கு" என ஓப்பனாக கூறி இருக்கின்றார்.


மேலும் "நான் மன அழுத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டேன், வாழ்க்கையில் நிறைய வலி கொடுக்கும் விஷயங்கள் நடந்து இருக்கலாம், சிலவற்றை சொல்ல முடியும், சிலவற்றை நம்மால் சொல்ல முடியாது இது தான் மன அழுத்தமாக வெளிவருகிறது. இதற்காக மன நலமருத்துவரிடம் ஆலோசனை கூட செய்தேன் அவர் மெடிடேஷன் செய்ய சொன்னார். ஆனால், மெடிடேஷன் என்னை மிகவும் சோர்வாக்கியது. அந்த நேரத்தில் தான் என் சிறுவயது நண்பர்கள் பலரை பேஸ்புக் மூலம் சந்தித்தேன். அவர்களிடம் பல விஷயங்களை பேசினேன், இப்போது எனது மனஅழுத்தம் குறைந்துள்ளது" எனவும் கூறி உள்ளார்.


எது எவ்வாறாயினும் ஐஸ்வர்யா "காலையில எழுந்ததும் குடிக்கணும்னு தோணிச்சு என்றால் குடிப்பேன்" என்று கூறிய விடயமானது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement