• Jul 25 2025

நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேமிலி கூட தான்- மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜாலி பண்ணும் பிரகாஷ் ராஜ்- கியூட்டான போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், போன்ற பல்வேறு மொழிகளில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வருபவர் தான் பிரகாஷ் ராஜ். சமீப காலமாக அரசியல் குறித்தும் காரஞ்சாரமான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்.


இவர் பிரபல நடிகை லலிதா குமாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டு, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல பாடகி போனி வர்மாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.


மூத்த மனைவியான லலிதா குமாரி மூலம் பிரகாஷ் ராஜிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், போனி வர்மாவை  திருமணம் செய்த பின்னர் மகன் ஒருவரும் பிறந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவி, மகள், மகனுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ள பிரகாஷ் ராஜ் தற்போது பேமிலி டைம் என்கிற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


குளிக்காலத்தில் மதிய நேரத்தில் இது போல் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது மிகவும் ஆனந்தமானது என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தில், பிரகாஷ் ராஜின் மகள்களும் உள்ளனர். அதே போல் மனைவி போனி வர்மா, தன்னுடைய மகன்... என மிகவும் கொண்டாட்டமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறதைக் காணலாம்.







Advertisement

Advertisement