• Jul 24 2025

'பத்து தல' சிம்புவிற்கு கை கொடுக்குமா..? இல்லையா.? படம் எப்படி இருக்கு..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சிம்புவின் நடிப்பில் தற்போது 'பத்து தல' திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


இந்நிலையில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் முதல் சிம்பு படம் இது என்பதால் தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அதுமட்டும்மல்லாது பத்து தல படம் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கின்றது என்பது தொடர்பாக டுவிட்டரில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். 


அந்தவகையில் ஒருவர் "பத்து தல படத்தில் சிம்புவின் நடிப்பு கிளாஸ் ஆக இருக்கிறது. ஒபிலி என் கிருஷ்ணாவின் திரைக்கதை நல்ல டுவிஸ்ட்டுகள் நிறைந்து விறுவிறுவென இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் ஸ்டண்ட் காட்சிகள் வேறலெவல். கவுதம் கார்த்திக்கிற்கு நல்ல கேரக்டர் சிறப்பாக நடித்துள்ளார்" என பதிவிட்டு இருக்கின்றார்.


அதேபோல் இன்னொருவர் "பத்து தல சீட் நுனியில் பார்க்கும் அளவுக்கு விறுவிறுப்பாக உள்ளது. சிலம்பரசனின் நடிப்பு நெருப்பாக உள்ளது. கண்டிப்பாக என்ஜாய் பண்ணலாம். ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். அது பாசிடிவ் ஆக அமைந்துள்ளது. கவுதமிற்கு நேர்த்தியான ரோல். முதல் பாதியும், இரண்டாம் பாதியும் அதகளமாக உள்ளது. பத்து தல சிம்புவுக்கு ஹாட்ரிக் படமாக அமைந்துள்ளது" என கூறி இருக்கின்றார்.

மேலும் "பத்து தல சிம்புவின் கிளாஸ் மற்றும் மாஸ் ஆன படமாக அமைந்துள்ளது. கவுதம் கார்த்திக் நல்ல ரோல், முதல் பாதி முழுவதும் ஆனாயசமாக நகர்த்தி சென்றுள்ளார். சிம்புவுக்கு இது ஹாட்ரிக்" எனவும் பாரட்டி உள்ளனர்.


இன்னொரு நெட்டிசன் "பத்து தல படத்தின் மிகப்பெரிய பாசிடிவ் முதல் பாதி தான். முதல் பாதி திரைக்கதையும் செம்ம ஸ்பீடு. படம் ஆரம்பிச்சதும் தெரியல, முடிஞ்சதும் தெரியல. சிம்பு தனி ஒருவனாக படத்தை தாங்கி உள்ளார். படத்தின் ஒளிப்பதிவு வேறலெவல். இயக்குநரும் சூப்பராக எடுத்துள்ளார். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்" என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் "பத்து தல கெத்து தல. சிலம்பரசனின் நடிப்பு தீயா இருக்கு. ஏ.ஆர்.ரகுமானின் இசை சூப்பர். படத்தின் திரைக்கதையை அருமையாக எழுதி உள்ளனர். குறிப்பாக ஒளிப்பதிவாளர் பரூக் பாட்ஷாவுக்கு பாராட்டுக்கள். காட்சிகள் அனைத்தும் பிரம்மிப்பாக உள்ளது, குறிப்பாக கிளைமாக்ஸ்" என பாராட்டி உள்ளார். 


இவ்வாறாக பத்து தல படமானது பல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது.

Advertisement

Advertisement