• Jul 24 2025

கீர்த்தி சுரேஷுடன் நெருக்கமாக இருக்கும் இவர் யார்? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..! வைரல் புகைப்படம் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மாரி செல்வராஜ் முக்கியமான இயக்குநர் என்பதால் மாமன்னன் படமும் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே சமீபகாலமாக கீர்த்தி சுரேஷின் காதல் குறித்து பரவலாக பேசப்படுகிறது. அதாவது அவர் வளைகுடா நாட்டில் வசிக்கும் தனது சிறு வயது நண்பரான ஃபர்ஹான் என்பவரை காதலித்துவருவதாக தகவல் வெளியானது. 

மேலும் சமீபத்தில் ஃபர்ஹானுக்கு பிறந்தநாள் வாழ்த்தை கீர்த்தி சுரேஷ் சொல்லியதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவது உறுதி என கூறினர். இந்தப் பேச்சு தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க, சில நாள்களுக்கு முன்பு அதை தீவிரமாக மறுத்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

சமீபத்தில் நடந்த மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில்கூட இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கும், எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதிலேயே கவனமாக இருக்கீங்களே. திருமணம் செய்துகொண்டால் அதை நானே சொல்லுவேன் என கூறியிருந்தார். 

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தால் அவரது காதல் கிசுகிசு மீண்டும் தலைதூக்கியது. ஒருவர் கீர்த்தி சுரேஷை அணைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

அதைப் பார்த்த நெட்டிசன்களில் ஒருதரப்பினர் ஒருவேளை இவர்தான் கீர்த்தி சுரேஷின் காதலராக இருப்பாரோ என கேள்வி எழுப்பிவருகின்றனர். ஆனால், கீர்த்தியின் ரசிகர்களோ ஏன் ஒரு ஆண் ஒரு பெண்ணை அணைத்திருந்தால் அவர் காதலராகத்தான் இருக்க வேண்டுமா நண்பராக இருக்கக்கூடாதா என பதில் கேள்வி வைத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement