• Jul 23 2025

என்னிடமிருந்து விலகிய ஒரு ஹீரோ நீங்க தான் ஆனால் ஆதாரம் என்கிட்ட இருக்கு- விஜய்க்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துத் தெரிவித்த நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில், டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது.தமிழ் திரையுலகை தாண்டி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என அனைத்து மொழிகளிலுமே தளபதி விஜய்க்கு ஆயிரம் கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தளபதி விஜயின் 49-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு அனைத்து திரையுலகை சேர்ந்த ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளத்தின் மூலம் நேற்றில் இருந்தே தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


அதேபோல் தளபதியின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, இன்று 'லியோ' படத்தில் இருந்து பெஸ்ட் லுக் மற்றும் நா ரெடி தான் என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்த நிலையில் நடிகை லைலாவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

அதில் அவர் கூறியதாவது இந்த புகைப்படத்திற்கு "த ஒன் தட் அவே" என்று தலைப்பிடுவேன் என்னிடமிருந்து விலகிய ஒரு ஹீரோ இவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் நாங்கள் இன்னும் ஒன்றாக நடித்துள்ளோம் என்பதை நிரூபிக்கும் வகையில் எங்களிடம் புகைப்படங்கள் உள்ளன என்றும் போட்டுள்ளார்.


அதாவது உன்னை நினைத்து என்னும் திரைப்படத்தில் முதலில் விஜய் தான் நடித்திருந்தார்.பின்னர் அப்படத்திலிருந்து விஜய் விலகியதைத் தொடர்ந்து தான் சூர்யா நடித்திருந்தார். இப்படத்தில் கதாநாயகிகளாக லைலா மற்றும் சினேகா ஆகியோர் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement