• Jul 26 2025

கனெக்ட் படம் நல்லா இல்லை என்று ஏன் ஒப்பாரி வைக்கிறாய்- மனைவிக்காக டுவிட்டரில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் கனெக்ட்.இந்த படத்தை விக்னேஷ் சிவனின் சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது.

இதனால் இப்படத்தின் ப்ரமோஷனுக்காக நயன்தாரா நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.மேலும் நயன்தாராவின் நடிப்பில் இரண்டாவது முறையாக உருவாகிய பேய்ப்படம் தான் கனெக்ட்.


இருந்தாலும் இப்படம் வெளியாகி  எதிர்பார்த்த அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. நயன்தாராவிற்கு கடந்த சில படங்கள் எதுவும் வெற்றி படங்களாக அமையவில்லை. கனெக்ட் படத்துடன் வெளியான லத்தி படம் ட்ரெண்டான அளவிற்கு கூட இந்த கனெக்ட் படம் ட்ரெண்ட் ஆகவில்லை. 

ஆனால் படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாகவே விமர்சனங்களை கூறினர். இந்தப் படத்திற்கு விக்னேஷ் சிவன் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்தார். ஆனால் எதிர்பார்த்த வெற்றியை படம் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


இந்த நிலையில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் கனெக்ட் திரைப்படத்தின் போஸ்டரை பகிர்ந்த ஒருவர் இந்த படம் மிகத் திரில்லிங்கான ஒரு பேய் படமாக வந்திருக்கிறது விக்னேஷ் சிவன் இந்த படத்தை தயாரித்ததற்கு நன்றி சோர்வடையாமல் முன்னேறிக்கொண்டே இருங்கள் என்று பகிர்ந்திருந்தார். 

இதை ஷேர் செய்த விக்னேஷ் இவன் உங்களுடைய நேர்மையான விமர்சனத்திற்கு நன்றி, வன்மங்கள் நிறைந்த இந்த பொய்யான ரிவியூகள் மற்றும் கமெண்ட்களில் இருந்து எங்களை காத்ததற்கு நன்றி என்று பதில் அளித்து இருக்கிறார். அதற்கு கமெண்ட் செய்துள்ள ரசிகர்கள் படம் சுமாராகத்தான் இருந்தது எல்லாரிடமிருந்தும் பாசிட்டிவ் விமர்சனத்தை நீங்கள் எதிர் பார்க்க முடியாது. உங்கள் படம் நல்லா இல்லை என்று சொன்னால் வன்மம்னு ஏன் இப்படி ஒப்பாரி வைக்கிறாய் என்று விக்னேஷ் சிவனை திட்டி தீர்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement